அகத்திணையியல்--நூற்பா எண் 205753

முன
 

முன்னத்தின் இயல்


577    இவ்விடத்து இம்மொழி இவர்இவர்க்கு உரியஎன்று
      அவ்விடத்து அவர்அவர்க்கு உரைப்பது முன்னம்.


     இஃது எட்டாம் எண்ணும் முறைமைக்கண் நின்ற முன்னம்
இவ்வியல்பிற்றாய் வரும் என்கின்றது.

     (இ-ள்) யாதோர் இடத்தானும் ஒரு மொழி தோன்றியக்கால்,
அம்மொழி சொல்லுதற்கு உரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னார் என்று
அறியுமாற்றான். அங்ஙனம் அறிதற்கு ஓர் இடம் நாட்டிக் கூறுவார்க்கும்
கேட்பார்க்கும் ஏற்ற உரை செய்யுட்கு ஈடாகச் சொல்லுவது முன்னம்
என்றவாறு.

      ‘யார்இவன் எம்கூந்தல் கொள்வான் இதுவுமோர்
      ஊராண்மைக்கு ஒத்த படிறுஉடைத்து’

கலி. 89

என்றக்கால், இம்மாற்றம் சொல்லுகின்றாள் தலைவி எனவும்,
சொல்லப்பட்டான் தலைமகன் எனவும் முன்னத்தான் அறியப்படுதலின் இது
முன்னம் ஆயிற்று. பிறவும் அன்ன.

 205

விளக்கம்
 

     இந் நூற்பாத் தொல். பொ. 519; உரை பேராசிரியருடையதே.

     ஒரு தொடரைக் குறிப்பிடும்போது, அதனைக் கூறியவர் யாவர்,
கேட்டவர் யாவர் என்பது அத் தொடரில் வெளிப்படையாகக்
குறிக்கப்படாது போயினும், அதனை நோக்குவார் அதனைக் கூறியவரும்
கேட்டவரும் இன்னார் என்று உணர்தற்கு ஏதுவாகியதொரு வாய்ப்பு
அதன்கண் குறிப்பாக அறியுமாறு செய்யுள் செய்வதே முன்னம் என்ற
உறுப்பாம் என்பது.
95