754இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

இம
 

    இம்முன்னம் என்ற உறுப்புப்போல்வன அகம் புறம் என்ற
இரண்டற்கும் ஒக்கும் என்பது பேராசிரியர் கருத்து.

          ‘யார் இவன் ... ... ... படிறு உடைத்து’

    தலைவன் காமத்தின் வலிமையால் ஆற்றாமை வாயிலாக வலிந்துபுக்கு
நெருங்கிக் கூடும்இடத்து, அவனுடன் தலைவி ஊடிச் சில சொல்லி, அவன்
ஆற்றாமை கூறுவதுகேட்டு ஊடல் தீர்ந்தது பற்றிய கலிப்பாப் பகுதி இது.

   ‘இவன் யார் என்கூந்தலைத் தொடுவதற்கு? இவன் என்ன தொடர்பு
உடையவன்’ என நெஞ்சொடு கூறிப் பின் ‘இங்ஙனம் கூந்தலைப் பிடிக்கின்ற
இதுவும் நீ பாதுகாத்தலை இன்றிப் பாதுகாப்பாரைப் போலப்
பண்ணிக்கொண்டு ஊரையாளும் தன்மைக்குப் பொருந்தினதொரு கொடுமை
உடைத்து’ எனத் தலைவனிடம் தலைவி கூறினாள்.

   இப்பகுதியைக் கூறினவள் தலைவி எனவும் கேட்டவன் தலைவன்

எனவும் அறியச் செய்யுட் பகுதியில் வெளிப்படையாகச் சொற்கள் இல்லை
ஆயினும், கூறினவரும் கேட்டவரும் இன்னார் என்று அறிதற்கு உரிய
குறிப்பு அவ்வடிக்கண் இருத்தலே முன்னம் என்னும் உறுப்பாம்.
 

ஒத்த நூற்பாக்கள்


       முழுதும்--                          
தொல்.பொ. 519


       ‘இன்னார்க்கு இன்னுழி இதுபயக் கும்எனும்
       முன்னம் தருவது முன்னம் ஆகும்’

ந.அ. 230


மெய்ப்பாடும் அதன் பொது வகையும்


578   உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளின்
      மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடு அதுதான்
      நகையே அழுகை இளிவரல் மருட்கை
      அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்று