அப்பால் எட்டாம் அவ்வகை
எட்டும்
எள்ளல்1 இளமை2 பேதைமை3 மடமே4
இளிவே5 இழவே6 அசைவே7 வறுமை8
மூப்பே9 பிணியே10 வருத்தம்11 மென்மை12
புதுமை13 பெருமை14 சிறுமை15 ஆக்கம்16
அணங்கே17 விலங்கே18 கள்வர்19 தம் இறையே20
கல்வி21 தறுகண்22 இசைமை23 கொடையே24
உறுப்பறை25 குடிகோள்26 அலை27 கொலை28 அவற்றொடு
செல்வம்29 புலனே30 புணர்வு31 விளை யாட்டு32 எனப்
புல்லித் தோன்றும் பொருள்வகை அவற்றான்
ஒன்று நான்குசெய்து உறழஎண் ணான்காம்
என்று கூறுப இயல்புணர்ந் தோரே.
இஃது ஒன்பதாம் எண்ணு முறைமைக்கண் நின்ற மெய்ப்பாடு
இவ்வியல்பிற்றாய் இத்துணைப் பகுதிப்பட்டுச் செய்யுட்கு உறுப்பாய் வரும்
என்கின்றது.
(இ.ள்) உய்த்துணர்ச்சியின்றி அவ்விடத்து வந்த பொருளானே,
சொல்லப்படும்
பொருள் தானே வெளிப்பட்டாங்குக் கண்ணீர் அரும்பல்-
மெய்மயிர்
சிலிர்த்தல்-முதலாகிய சத்துவம் படுமாற்றன், வெளிப்படச்
செய்வது
மெய்ப்பாடு என்னும் உறுப்பாம். அம்மெய்ப்பாட்டு உறுப்புத் தான்
வகையானே நகை முதலாக உவகை
ஈறாகக் கிடந்த அப்பகுதி எட்டாம்;
அப்பகுதி எட்டும் விரியானே எள்ளல் முதலாக விளையாட்டு ஈறாக
இயைபுபடத் தோன்றாநின்ற பொருட்பகுதிகளான் ஒன்றை நான்காகச்
செய்துமாற முப்பத்திரண்டாம்
என்று கூறுவர் அவற்றின் தன்மையை
அறிந்தோர் என்றவாறு.
கவிப்பொருள உணர்ந்த அதனானே சொல்லப்படும் பொருள் உய்த்து
வேறு
கண்டாங்கு அறிதலை மெய்ப்பாடு என்றார். அது தேவர் உலகம்
கூறினும்,
அதனைக் கண்டாங்கு அறியச்செய்தல் செய்யுள் உறுப்பாம்
என்றவாறாம்.ஆகவே, மெய்ப்பாடு பொருட்பாடு ஆயிற்று என்பது. அது,
|