அகத்திணையியல்--நூற்பா எண் 206757

இன
 

இனி, மெய்ப்பாடுபற்றி வீரசோழிய நூலின் 76ஆம் காரிகை உரையுள் காணப்படுவன பின்வருமாறு:


        ‘மெய்ப்பாட் டியல்வகை மேதக விரிப்பின்
        மெய்க்கண் பட்டு விளங்கித் தோற்றம்
        செவ்விதின் தெரிந்து செப்பல்;மற்று அதுவே,
        சுப்பிர யோகம் விப்பிர யோகம்
        சோகம் மோகம் மரணம் என்னும்
        ஐவகைக் கணையுள் ஆக்கிய காமம்
        பைய முறுகிடப் படரும்; அவற்றுள்,
        சுப்பிர யோகம் சொல்லும் நினைப்பும்;
        விப்பிர யோகம் வெய்துஉயிர்ப்பு உறுதல்;
        சோகம் வெப்பும் சோறுஉண் ணாமையும்;
        மோகம் மயக்கமும் மொழிபல பிதற்றலும் ;
        மரணம் அணங்கலும் வருந்தலும் என்பர்
        அரணம் சான்ற அறிவி னோரே.’

        ‘பிற்கணை நீக்கி முற்கண் நான்கும்
        மெய்ப்படப் பட்டு வருந்தி விளம்பல்
        அகமெய்ப் பாடே புறமெய்ப் பாடெனத்
        தகநனி உணர்ந்தோர் தந்துஉரைத் தனரே'.

        ‘அகமெய்ப் பாடே அறியுங் காலை
        விளர்ப்பே பசப்பே மெலிவே விதிர்ப்பே
        துளக்கம் துயர்தல் தும்மல் சோர்தல்
        வேர்த்தல் வெருவுதல் விம்முதல் விரும்புதல்
        ஒப்பி லாமை உருகுதல் மயங்குதல்
        மூரி உயிர்ப்பு மூர்ச்சனை முறுவல்
        காரிகை கடத்தல் கழிகண் ணோட்டம்
        இருந்துழி இராமை இராகம் இகழ்தல்
        வருந்திக் காட்டுதல் வாய்நீர் ஊறுதல்
        சிந்தனை கூர்தல் சேர்துயில் இன்மை
        கண்டது மறுத்தல் காட்சி விரும்பல்