758இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

உண
 

     உண்டிவிரும் பாமை உரைத்தது மறுத்தல்
     கண்ணீர் வழிதல் கனவுநனி காண்டல்என
     எண்ணாற் றுறையும் என்மனார் புலவர்.'

     ‘புறமெய்ப் பாடே திறனுளிப் புகலின்
     ஆரணங் காயஅக் காமம் தானே
     காரணம் பற்றிக் கருத்துவேறு பட்டு
     மற்றும்ஓர் ஏழாய் மெய்க்கண் டதனொடும்
     எட்டாம் என்ப இயல்புணர்ந் தோரே.'


 ‘அவைதாம்
,

     நற்சிருங் காரம் நகையே வியப்பே
     அச்சம் வீரம் உட்கோள் இரக்கம்
     இழிப்புஎனத் தோன்றின இவை; அவை தாமே,
     விழுத்தக ஒன்றிற்கு ஒரோநான் காக
     முப்பத் திரண்டென மொழிந்தனர் கண்டே.'


  அவற்றுள்
,

    ‘இளமையும் வனப்பும் வளமையும் கல்வியும்
    களனாகத் திரிதரும் சிருங்கா ரம்மே.'

    ‘மயக்கம் பெயர்ப்பே இகழ்வே நோக்கம்
    நயப்பத் தோன்றும் நகையது நலனே.'

   ‘தறுண்மை புலமை பொருளே பண்பே
    பெறுவழித் தோன்றும் பெருந்தகு வியப்பே.'

   ‘மாற்றலர் விலங்கல் மற்றவர் சேருதல்
    ஆற்றத் தோன்றும் அச்சத்து விளைவே.'

   ‘பகையே செருவே இகலே முனிவே
    மிகுவழித் தோன்றும் வீரத்து விளைவே’

   ‘ஐவகைக் குரவர் தேவர் மன்னர்
    எய்தாது எய்திய இயல்பவை உட்கோள்.'