வருத்தம் இகழ்வே
வலியின்மை பெருமை
இரக்கம் தோன்றும் இந்நா லிடத்தே.'
‘நாற்றம் சுவையே தோற்றம் ஊறுஎன்று
இந்நால் வழித்தாம் இழிப்புஎனப் படுமே.'
‘இற்றுஎன வகுத்தல் எண்ணாற் றுறையினும்
மற்றுப் பெயர்மயக்கு ஆயினும் வாய்ப்பது
அந்நெறிப் பெற்றுழித் துன்னினர் கொளலே.'
‘உட்கோள் நிலைமை உணர உரைப்பின்
மெய்க்கொளத் தோன்றின் அவை மெய்ப்பாடு என்ப.'
இம்மெய்ப்பாட்டிற்கு முன்னர்த்தாவது குறிப்பாகும்.
‘பெண்டிர் ஆயினும் மைந்தர் ஆயினும்
உண்ட வேட்கை உள்ளது கருதிக்
கொண்டுநனி செய்வது குறிப்புஎனப் படுமே.'
‘அதுவே,
உற்றவன் ஒழுக்கமும் உறாச்சிறு நோக்கமும்
பற்றிஉரை யாடலும் பாங்கிற் கேட்டலும்
ஊடலும் உணர்தலும் உவத்தலும் பரிதலும்
பாடலும் பரவலும் பணிதலும் பணித்தலும்
அணங்குகொண்டு அசைத்தலும் அழுங்குற்று உணர்த்தலும்
குணம்புகழ்ந்து உரைத்தலும் குற்றம் கூறலும்
செய்தது பொறுத்தலும் செய்வாய் திருத்தலும்
வைத்த மகிழ்தலும் வாட்டம் காட்டலும்
அணிந்தன களைஇ ஆடைபெயர்த்து உடுத்தலும்
நாணலும் நகுதலும் நயத்தலும் பார்த்தலும்
கானல் கழியே கடலே காற்றே
பானல் பற்றை பனிமதிப் பருவம்
மலையே புனமே மழையே பிறவும்
என்றிவை யிற்றொடு நின்றுஉரை யாடலும்
ஒன்றிய குறிப்புஎன உரைக்கல் வேண்டும்.'] |