நகை சிரிப்பு; அழுகை அவலம்;
அது, தானே அவலித்தலும் பிறர்
அவலம்கண்டு அவலித்தலும் என இருவகைப்பட்டு, ஒன்று கருணை எனவும்
ஒன்று அவலம் எனவும் பெயர்
பெற்றுச் சுவை ஒன்பதாதலும் உடைய
என்பது. இளிவரல் இழிபு.
மருட்கை வியப்பு; அற்புதம் எனினும் அமையும்.
அச்சம் பயம். பெருமிதம் வீரம். எல்லாரோடும் ஒப்பநில்லாது
பேரெல்லையாகி நிற்றலின், அது பெருமிதம் எனப்பட்டது. வெகுளி
உருத்திரம். உவகை காமம் முதலிய மகிழ்ச்சி. இம்மெய்ப்பாடு எட்டனையும்
சுவை எனவும், குறிப்பு எனவும் வழங்கினும் அமையும். இவ்வெட்டன்
கிடக்கைமுறைக் காரணங்களும் ஓர்ந்து உணர்க. ஈண்டு உரைப்பின்
பெருகும்.
விளக்கம்
‘நகையே அழுகை இளிவரல்
மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப'
தொல். பொ. 251
என்ற நூற்பாவும், அதன் பேராசிரியர் உரையும் ஏற்ற பெற்றி
கொள்ளப்பட்டுள்ளன.
தானே அவலித்தல் அவலம்;பிறர் துயரம் கண்டு வருந்துதல் கருணை
என்று கொள்க. அழுகையை
இரண்டாகப் பிரித்துக் கொண்டால்
மெய்ப்பாட்டு வகை ஒன்பதாகிவிடும்.
இளிவரல்-அருவருப்பு. பெருமிதம்-மற்றவரின் மேம்பட்டுக்
காணப்படுவதற்குக் காரணமான வீரம்.
இவற்றின் கிடக்கை முறைபற்றிப் பேராசிரியர் ‘மற்று, நகையை முன்
வைத்தது என்னையோஎனின், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு
பொருட்கும் இவை என்னும் இயைபு இல்லன அல்ல என்பதற்கு,
விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்தான். அதற்கு
மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்தான். இளிவரல் அதன்பின்
வைத்தான், அழுகையும் இளிவரலோடு இயைபு உடைமை- |