நகை
என்ற மெய்ப்பாடு
எள்ளல் இகழ்ச்சி. இளமை-குழத்தன்மை. பேதைமை-அறிவின்மை,
மடம்-கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை.
எள்ளல் முதலாக ஆக்கம் ஈறாகக் கிடந்த நானான்கும் ஒன்று
இரண்டாகி
நாலெட்டு ஆதலும் உடைய. அங்ஙனம் ஆதல் மேற்காட்டும்
உதாரணங்களான் உணர்க.
1 எள்ளல்:
‘எள்ளி நகினும் வரூஉம்’
கலி. 61
எனத் தன்கண் கிடந்த எள்ளலும்,
தன்மகள் தன்னை மதியாது இகழ்ந்தாள் என்றலின்,
‘நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே’
அகநா. 248
எனப் பிறர் எள்ளியதும்,
2 இளமை:
‘நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே’
கலி. 13
எனத்தன் இளமையும்,
‘நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்’
அகநா. 16
எனப் பிறர் இளமையும்,
3 பேதைமை :
தான் செய்த தவற்றுக்குத் தாய் தன்னை வெகுண்டது
தனக்கு நகையாகக்
கொண்டமையின்,
‘நகைநீ கேளாய் தோழி’
அகநா. 248
எனத் தன் பேதைமையும்,
‘நகையாகின்றே தோழி, ... ...
மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே’
அகநா. 56
எனப் பிறன் பேதைமையும், |