அகத்திணையியல்--நூற்பா எண் 206765

4 மடம
 

4 மடம்:

    ‘நீயிர் கூறியதனையே மெய்யெனக் கொண்டு மகிழ்ந்து
    நக்கனம்’ என்றமையின்,
    ‘நும்மொடு நக்க வால்வெள் எயிறே’

குறுந், 169

    எனத் தன்மடமும்,


    ‘நாம் நகை உடையம் நெஞ்சே நம்மொடு
    தான்வரும் என்ப தடமென் தோளி.’

அகநா. 121

எனப் பிறர் மடமும் பொருளாக நகை பிறந்தவாறு.
 

விளக்கம்
 

     மடம்-செவிலியர் முதலாயினார் கூறியதை மனத்துக் கொண்டு தான்
அறிந்ததை வெளிப்படையாகக் கூறாது பின்பற்றுதல்.

     நகை அழுகை இளிவரல் மருட்கை இவற்றின் நிலைக் களங்கள் ஆகிய பதினாறும், தன்கண் தோன்றுவது, பிறன் கண் தோன்றுவது, என்ற
இருவகையால் முப்பத்திரண்டாகும்.

‘எள்ளிநகினும் வருஉம்’ -

    தலைவற்குக் குறைநேர்ந்த தோழி அவனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண், அவன் குறை மறாமைக்கு ஏற்பனசொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்த பாடற்பகுதியாகிய இதன்கண், ‘நான் தலைவன் குறை நயத்தல்பற்றி அவனைப்பரிகசித்துச் சிரித்தாலும் தவறாது வருகிறான்’ என்ற கருத்தில், தான் எள்ளியது பொருளாக நகை பிறந்தது.

‘நல்லைமன் என நகூஉப் பெயர்ந்தோளே’-


     இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பத் தோழி சொல்லிய பாடல் பகுதிஇது.