தோழியால் ‘தலைமகளும் உடன்வரும்‘ எனக்கேட்ட தலைமகன்,
தன்நெஞ்சிற்குச் சொல்லிய பாடல் பகுதிஇது.
பாலை நிலத்தின் கொடுமையைச் சிறிதும் அறியாது தலைவி
தன்னுடன்
வரக்கருதுதல்பற்றிய அவள் மடம் காரணமாகத் தலைவனுக்கு
நகை
ஏற்பட்டவாறு]
அழுகை என்ற மெய்ப்பாடு
இளிவு-பிறரான் இகழப்பட்டு
எளியனாதல், இழவு-தந்தையும் தாயும்
முதலாகிய சுற்றத்தாரையும், இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயவற்றையும்
இழத்தல். அசைவு-பண்டை நிலைமை கெட்டு வேறொருவாறாகி வருந்துதல்.
வறுமை-போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம்.
5 இளிவு :
பரத்தையை நீ எள்ளினை என்று அழுது வருகின்றாள்
என்று தலைமகற்குச் சொல்லியதாகலின்,
எழுதுஎழில் சிதைய அழுதனள் ஏங்கி
அடித்தென உருத்த துத்திப் பல்லூழ்
நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு
கூர்நுதி மழுங்கிய எயிற்றள்
ஊர்முழுதும் நுவலும்நிற் காணிய சென்மே.
அகநா. 176
எனத் தன் இளிவும்,
தலைவன் இளிவந்து ஒழுகுவது காரணமாக,
‘சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்’
கலி. 37
என்றமையின், ‘கயமலர் உண்கண்ணாய் காணாய்’
கலி. 37
என்னும் பாட்டினுள் ‘ தான் உற்றநோய் உரைக்கல்லான் பெயரும்மன்
பன்னாளும்’ எனப் பிறன்கண்
தோன்றிய இளிவும்,
(இது கருணைச் சுவைக்குப் பொருள் எனப்படும்.) |