அகத்திணையியல்--நூற்பா எண் 206769

6 இழ
 

6 இழவு :

கணவனை இழந்தாள் அவற்குப் பலிக்கொடை கொடுத்தற்கு
மெழுகுகின்றாளைக் கண்ணீரே நீராக மெழுகுகின்றாள் என்றமையின்,


      ‘மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே’

புறநா. 249

எனத் தன்கண் தோன்றிய இழவும்,

தலைவன் பிரிவிற்குத் தோழி படர் கூர்ந்தாள் எனச்
சொல்லினமையின்,


        ‘பின்னொடு முடித்த மண்ணா முச்சி’

அகநா. 73

என்னும் பாட்டினுள்,

        ‘அணங்குறு கற்பொடு மடங்கொளச் சாஅய்
        நின்னோய்த் தலையையும் அல்லை தெறுவர
        என்னா குவள்கொல் அளியள் தானென
        நின்னழிபு இரங்கும் நின்னொடு யானும்.’

எனப்பிறன்கண் தோன்றிய இழவும்,

7 அசைவு :

      ‘துளியிடை மின்னுப்போல் தோன்றி ஒருத்தி
      ஒளியோடு உருஎன்னைக் காட்டி அளியள்என்
      நெஞ்சுஆறு கொண்டாள் அதற்கொண்டு துஞ்சேன்.’

கலி. 139

எனத் தன்கண் தோன்றிய அசைவும்,

      ‘அள்ளிலைத் தாளி கொய்யா நின்றான் இது பொழுது’ என்று
அவலித்துச் சொன்னமையின்,

      ‘இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
      சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே,’

புறநா. 252


எனப் பிறன்கண் தோன்றிய அசைவும்,

97