8 வறுமை:
‘இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துமுகம் நோக்கி.’
புறநா. 164
எனத் தன்கண் தோன்றிய வறுமையும்,
‘நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண.!'
புறம். 164
எனப் பிறன்கண் தோன்றிய வறுமையும் பொருளாக அவலம்
பிறந்தவாறு.
விளக்கம்
வறுமை-பொருளை நுகருவதில் விருப்பம் இருந்தும் பொருள்
கிடைக்கப் பெறாது மனம் தடுமாறுதல்.
பொருள் இல்லாமை வறுமை ஆகாது; பொருளிடத்து ஆசை வைத்தும்,
அது கிடைக்கப் பெறாமையே
வறுமையாம். ஆகவே, செல்வம்
அற்றவர்களில் வறுமை யில்லாதவரையும், செல்வம் உடையவர்களில்
வறுமை உற்றவர்களையும் காணலாம்.
‘எழுதுஎழில் சிதைய ... ... ...சென்மே’--
தோழி தலைவன் புறத்தொழுக்கம்கண்டு வாயில் மறுத்த பாடற்பகுதி
இது.
அவன் மற்றவர் தொடர்பு கோடலைத் தாம் பொறுத்திருப்பதுபோலப்
பரத்தை பொறுக்க மாட்டாள் எனவும், தலைவன் பரத்தையை விடுத்து
வேற்றவரோடு விழா அயர்ந்து தழுவியதுகண்டு பொறாது தன் செயற்கை
வனப்புக்கெட அழுது, பொன்னை உருக்கி வார்த்தாற்போன்ற தேமலை
உடைய அவள் தன் சிவந்த விரல்களைக் கடித்தலான் நுதி மழுங்கிய
பற்களை உடையளாய், ஊர் முழுதும் அலர் தூற்றப்பட்டிருக்கும் அவனைக்
காணத் தேடிச் செல்கின்றாள்; |