‘இல்லி தூர்ந்த ... ...
குமண’ --
தம்பியால் நாடு கடத்தப்பட்டுக் காடு பற்றி இருந்த குமணணிடம்தம்
வறுமைநிலை கூறிப் பெருந்தலைச்சாத்தனார் பாடிய பரிசில் கடாநிலைப்
பாடற்பகுதி இது.
தாயின் பாலில்லாத மார்பைச் சுவைத்து உண்ண வாய்ப்பு
இன்மையால்
குழந்தை அழுகின்றது என்பது குழந்தைக்குத் தன் வறுமை
பொருளாக
அழுகை பிறந்தவாறு.
‘பாலின்றி அழும் குழந்தையது முகம் பார்த்துக் கண்ணீர் நிரம்பிய
என்
மனைவியின் துயர் நோக்கி அதனைப் போக்க வல்லாய் நீயே என்று
நின்னை நினைத்து வந்தேன்’ என்ற பகுதியில், குழந்தையது வறுமை
நோக்கித் தாய் கண்ணீர் உகுத்தது பிறர் வறுமை பொருளாக அழுகை
பிறந்தவாறு.]
இளிவரல் என்ற மெய்ப்பாடு
மூப்பு-கிழம். பிணி-நோய்.
வருத்தம்-முயற்சி. மென்மை-மெலிதாதல் தன்மை.
9 மூப்பு:
இளமைக் காலத்துச் செய்தன செய்யமாட்டாது இளிவந்தனம்
இக்காலத்து என்றமையின்,
‘தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இரும்இடை மிடைந்த சில்சொல்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே.'
புறநா. 243
எனத் தன்கண் தோன்றிய மூப்பும்,
‘மூத்துத்தலை இறைஞ்சிய நின்னொடு யானே
போர்த்தொழில் தொடங்க நாணுவல் அதனால்'
தொல். பொ. 254.
உரை-மேற்
எனப் பிறன்கண் தோன்றிய
மூப்பும், |