10 பிணி:
‘மலையைத் துளக்கும் ஆற்றலை உடையாய் காமப்பிணி
கூர்ந்தோரை அலைப்பது நினக்குத் தகுவது அன்று' என
இளிவந்து வாடைக்குக் கூறினமையின்,
‘இமயமும் துளக்கும் பண்பினை
துணையிலர் அளியர் பெண்டிர்இஃது எவனோ'
குறுந். 158
எனத் தன்கண் தோன்றிய பிணியும்,
நெஞ்சினை வேறு நிறீஇக் கூறினமையின்,
‘குணகடல் திரையது பறைதபு நாரை
திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆரிரைக்கு அணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.'
குறுந். 128
எனப் பிறன்கண் தோன்றிய
பிணியும்,
11 வருத்தம்:
பின்நின்ற தலைமகன் கூறியதாகலின்,
‘யான்தன் அறிவல் தான்அறி யலளே'
குறுந், 337
எனத் தன்கண் தோன்றிய
வருத்தமும்,
அவன் இவ்வாறு ஒழுகுதல் நமக்கு இளிவரவாம்--
என்னும் குறிப்பினால் கூறிக் குறை நயப்பித்தமையின்,
‘ஒன்று, இரப்பான்போல் இளிவந்தும் சொல்லும்'
கலி: 47
எனப் பிறன்கண் தோன்றிய
வருத்தமும்,
12 மென்மை:
மெலியார் இளிவந்தன கூறுவர் ஆயினும் வலியார் மீக்கூறுவர் ஆயினும்
இவன் அவை செய்யான் என்றமையின், |