அகத்திணையியல்--நூற்பா எண் 206775

 

       ‘வலிய ரென வழிமொழியலன்
      மெலியரென மீக்கூறலன்'

 புறநா. 239


எனத் தன்கண்ணும் பிறன்கண்ணும் தோன்றிய மென்மையும் பொருளாகவும்,

          ‘யானை ஒருகை உடையது எறிவலோ யானும்
         இருகையும் சுமந்துவாழ் வேன்'

தொல். பொ. 254. உரை. மேற்

என வீரம் பொருளாகவும் இளிவரல் பிறந்தவாறு.
 

விளக்கம்
 

      வருத்தம் என்பது முயற்சி என்னும் பொருளது ஆதல்,

             ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
            போற்றினும் பொத்துப் படும்

-குறள்-468


என்னும் குறட்பா உரையில் பரிமேலழகர் ‘ஆற்றின் வருந்தா வருத்தம்'
என்ற தொடருக்கு ‘முடியும் உபாயத்தானே முயலாத முயற்சி' என்று
பொருள் கூறியவாற்றானும் உணரலாம்.

‘தொடித்தலை .... .... எமக்கே' --

      தொடித்தலை விழுத்தண்டூன்றினார் பாடிய கையறுநிலைப்
பாடற்பகுதி இது.

     இளமையில் மகளிரைப் பற்றித் தழுவுவழித் தழுவித் தூங்குவழித்
தூங்கி நெடுநீர்க் குட்டத்தில் துடும் எனப்பாய்ந்து குளித்து மணல்கொண்ட
கல்லா இளமை கழியப்பெற்று, தண்டு ஊன்றி இருமலோடு சில சொல்லே
பேசும் பெரிய மூப்பு உற்றது பற்றி வருந்தலின், இது தன்கண் பிறந்த
மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தவாறு.