நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயில்
முறுவலார் பாடிய கையறுநிலைப்
பாடற் பகுதி இது. அவன் குணநலன்களை எடுத்துப் பேசும் போது, ‘அவன்,
பகைவர் தன்னின் வலிமை உடையவர் என்று கருதி அவர்களுக்கு வழிபாடு
கூறி அறியான்; சிலர் தன்னின் மெலியவர் என்று கருதி அவரின் மிகுத்துச்
சொல்லுதல் அறியான்' என்ற இப்பகுதியில் மெய்ப்பாடு கொள்ளுதற்கு
எடுத்துக்காட்டு உள்ளது.
வலியர் என வழி மொழியாது, மெலியர் என மீக்கூறாது இருப்பது
சாந்தம்
என்ற நடுவு நிலையாம். அஃது ஈண்டு எடுத்துக்காட்டு ஆகாது.
அதனால்
அதிலிருந்து பெறப்படும் செய்திகள் ஈண்டு எடுத்துக்காட்டாகும்.
பொதுவாக
மக்கள் பண்பு வலியரை வழிமொழிதலும், மெலியரை மீ்க்கூறலும்
ஆம்
ஆகவே,
வலியர் என வழிமொழிதல் - தன் கண் தோன்றிய மென்மை
பொருளாக
இளிவரல் பிறப்பதாம்.
மெலியர் என மீக்கூறுதல் - பிறன்கண் தோன்றிய மென்மை
பொருளாக
இளிவரல் பிறப்பதாம்.
’யானை.... .... வாழ்வேன்’ -
இப்பாடல் யானையை எறியாது விடுத்த வீரன் கூறிய உரையாகும்.
‘யானை
விலங்கு; தனித்து இருப்பது; பாகனுக்கு அடங்கியது; மேலும் ஒரே
கையை
உடையது; யானோ இருகைகளை உடையவன்; ஆதலின்
யானையைக்
கொல்லுவது இளிவரலாகும்' என்ற கருத்துடைய இப்பாடலில்,
வீரம்
பொருளாக இளிவரல் பிறந்தவாறு,]
மருட்கை என்ற மெய்ப்பாடு:
புதுமை--புதிதாதல் தன்மை; அது காணாதன கண்டவற்றின்மேல்
நிகழ்வது.
பெருமை--பெரிதாதல் தன்மை; அது பண்டு கண்ட பொருள்கள்
போலாது
கழியப் பெரிய- |