அகத்திணையியல்--நூற்பா எண் 206779

 

ஆயினவற்றின்மேல் நிகழ்வது, சிறுமை-சிறதாதல் தன்மை; அது கடுகின்கண்

பலதுளைபோல இறப்பச் சிறிய ஆயினவற்றின்மேல் நிகழ்வது. ஆக்கம்--
ஒன்று ஒன்றாய்த்திரிதல்.

13 புதுமை:

       தன் கருத்து வெளிப்படாது தன்மெய்க்கண் தோன்றிய

       புதுமையை வியந்தாள்போலத் தோழிக்கு அறத்தொடு
       நின்றமையின்,

       ‘மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர்
       பலர்தில் வாழி தோழி அவருள்
       ஆரிருள் கங்குல் அணையொடு பொருந்தி
       ஓர்யான் ஆகுவது எவன்கொல்
       நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.'

அகநா. 82


        எனத் தன்கண் தோன்றிய புதுமையும்,
        பண்டொருகாலூம் கண்டறியாதபடி மயில் ஆடிற்று-
        என்றமையின்,

       ‘மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
       கழைவளர் அடுக்கத்து இயலி ஆடுமயில்
       விழவுக்கள விறலியின் தோன்றும் நாடன்.'

அகநா. 82

       எனப் பிறபொருட்கண் தோன்றிய புதுமையும்,

14 பெருமை:


கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன்  இழைத்தாற்போல
வழிமுறையால் பெருகற்பாலதாகிய நட்பு மற்று அவனைக்
கண்ணுற்றஞான்றே நிலத்தினது அகலம் போலவும் விசும்பின்
ஓக்கம்போலவும் கடலின் ஆழம்போலவும் ஒருகாலே பெருகிற்று
என்றமையின்,