780இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

     ‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
     நீரினும் ஆரளவு இன்றே சாரல்
     கருங்கோல் குறிஞ்சி பூக்கொண்டு
     பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே'

குறுந் 3

எனத் தன்கண் தோன்றிய பெருமையும்,


     (இது தலைமகன் கருத்தினை நட்பிற்குக் கொள்ளுங்கால்
பிறன்கண்தோன்றிய பெருமையும் ஆம்.)

15 சிறுமை:

     ‘மைம்மலர் ஓதி மணிநகைப் பேதைதன்
     கொம்மை வரிமுலை ஏந்தினும் - அம்ம
     கடையில் சிவந்த கருநெடுங்கண் பேதை
     இடையில் சிறியதொன்று இல்.'

தொல். பொ. 255

உரை -எடு

எனப் பிறன்கண் தோன்றிய சிறுமையும்,

     (தன்கண் தோன்றிய சிறுமை வந்துழிக் காண்க.)

16 ஆக்கம்:

      நரி வெரூஉத்தலையார் தம் உடம்பு பெற்று வியந்து கூறிய
பாட்டாகலின்,

      ‘எருமை அன்ன கருங்கல் இடைதோறு
      ஆனின் பரக்கும் யானைய முன்பின்
      கானக நாடனை நீயோ பெரும.'

புறநா. 5

எனத் தன்கண் தோன்றிய ஆக்கமும்,

     ‘உறக்கும் துணையதோர் ஆலம்வித்து ஈண்டி
     இறப்ப நிழல்பயந் தாஅங்கு.'

நாலடி. 38


எனப் பிறபொருட்கண் தோன்றிய ஆக்கமும்,