‘கிண்கிணி களைந்த கால்
ஒண்கழல் தொட்டு’
புறநா. 87
எனவும்,
‘அன்னான் ஒருவன்தன் ஆண்தகை விட்டுஎன்னைச்
சொல்லும் சொல்கேட்டி சுடரிழாய் பன்மாணும்.'
கலி. 47
எனவும்,
முறையே சிறியோன் பெருந்தொழில்செய்ததூஉம், பெரியோன்
சிறுதொழில் செய்ததூஉம்
பொருளாகவும் வியப்புச் சுவை பிறந்தவாறு.
விளக்கம்
‘மலர்தார் .... .... தோளேனே'--
தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்ற பாடற்பகுதி இது.
‘ஏனல்புனத்து வாயிலிலே தலைவன் நின்றானாக அவனைக்
கண்டோர்
பலராக அவருள்ளும் யான் ஒருத்தியே இரவில்
தலையணைகொண்டு
படுத்தும் கண்ணீரோடு உறக்கம் இன்றி உள்ளேன்’
என்ற இப்பகுதியில்
தலைவிக்குத் தன்கண் தோன்றிய புதுமை பற்றி
மருட்கை பிறந்தவாறு,
‘மந்தி .... .... நாடன்’
மூங்கில் துளை வழியே காற்றுப் புகும் ஓசையைக் குழல்
ஒலியாகவும்,
அருவிஒலியை முழவொலியாகவும், கலைஒலியை
வங்கியஒலியாகவும்,
வண்டுஒலியை யாழ்ஒலியாகவும் கொண்டு, மந்திகளாகிய
அரங்கத்தினர்
நோக்க, மூங்கில் வளர்ந்த பக்கமலையில் நடந்து வந்து
ஆடும் மயில்,
களத்தில் ஆடும் கூத்தி போலக் காட்சி வழங்குகிறது --
எனப்பிறந்தவாறு,
இத்தகைய மயில் ஆடுதலை இதற்கு முன் தலைவி
கண்டிராமையான். |