‘கிண்கிணி .... .... தொட்டு’
நெடுஞ்செழியன் கிண்கிணியைக் களைந்து கழல் அணியத் தொடங்கின
அன்றே பகைமன்னர் எழுவரை முறியடித்த செயல், சிறுபொருள்
பெருந்தொழில் செய்தலான் ஏற்பட்ட மருட்கைக்கு எடுத்துக்காட்டாகும்.
‘அன்னான் .... ...பன்மாணும்’
தலைவனைத் தலைவியிடம் குறை நயப்பிக்கும் தோழி கூற்றாக
அமைந்த பாடற்பகுதி இது.
‘நன்கு கற்றவனும், கற்றதற்கேற்ப அடக்கம் உடையவனும், இல்லோர்
துயர்
துடைக்கும் ஈகையானும் ஆகிய தலைவன் தன் ஆண்தகைமையை
விட்டுவிட்டு என்னிடம் இரப்பவரைப் போலப் பேசுகிறான்’ என்பதன்கண்,
பெரும் பொருள் சிறுதொழில் செய்தலான் ஏற்பட்ட மருட்கை
தோன்றியவாறு ]
அச்சம் என்ற மெய்ப்பாடு:
அணங்கு--அணங்குதல் தொழிலவாகிய பேய், பூதம், பாம்பு, நிரயபாலர்,
சவம் தின்பெண்டிர், உரும்இசை இத்தொடக்கத்தன. விலங்கு--யாளி, புலி
இத்தொடக்கத்தன, கள்வர்--பிறர் உடைமையை அவரை
வஞ்சித்துக்கொள்ளும் பொருட்டுத் தீ்த்தொழில் புரிவார். இறை--அரசனும்
தந்தையும் ஆசானும் முதலியோர்.
17,18 அணங்கு, விலங்கு:
‘யானை தாக்கினும் அரவுமேல் செலினும்
நீல்நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை’
பெரும்பாண் 134--6
இதனுள் அணங்கும், விலங்கும், |