784இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

19 கள
 

19 கள்வர்:

    ‘ஒரூஉ நீ எம்கூந்தல் கொள்ளல் யாம்நின்னை
    வெரூஉதும் காணுங் கடை’

கலி. 87
 

இதனுள் தலைவனைக் கள்வன்பால் சார்த்தி உரைத்தமையின் கள்வரும்,

20 இறை:

   ‘எருத்துமேல் நோக்குறின் வாழலேம் என்னும்
   கருத்தினால் கை கூப்பிப் பழகி--எருத்திறைஞ்சிக்
   கால்வண்ணம் அல்லால் கடுமான்தேர்க் கோதையை
   மேல்வண்ணம் கண்டறியா வேந்து.’


தொல். பொ. 256 உரை. எடு



இதனுள் இறையும் பொருளாக அச்சம் பிறிதுபொருள் பற்றியே வந்தவாறு.
 

விளக்கம்
 

     அணங்குதல்--துன்புறுத்துதல். நிரயபாலர் -- நரகத்தைப் பாதுகாத்து

நடத்துவோர்; அவர் தருமதேவதையின் ஏவலர் ஆகிய இயமன் முதலோர்.
சவம் தின்பெண்டிர்--இடாகினிப் பேய் முதலியன; உரும்இசை--இடியோசை.

‘யானை தாக்கினும் ... .... வாழ்க்கை’

     யானை தன் எதிரே செல்லினும், பாம்பு தன்மேலே செல்லினும்
நீலநிறத்தை உடைய மேகத்தினிடத்தே வலிய உரும் ஏறு இடிப்பினும்
கருக்கொண்ட இளம்பெண் அவற்றிற்கு அஞ்சி மீளா மறத்தைப் பூண்ட

வாழ்க்கை-என்பது பொருள்.

      இடிஇடித்தல் அணங்கு பொருளாகவரும் அச்சத்திற்கும், யானை
தாக்குதலும் அரவு மேற்செல்லுதலும் விலங்குபொருளாக வரும்
அச்சத்திற்கும் எடுத்துக்காட்டு.