அகத்திணையியல்--நூற்பா எண் 206785

 

‘ஒரூஉ ... .... கடை’--

     ‘பரத்தையர்சேரிச் சென்றமை அறிந்திலள்’ எனத் தலைவி மாட்டுச்
சென்றவனோடு அவள் உறழ்ந்து கூறித் தோழி வாயிலாகத் தன் ஊடல்
தீர்வாள், தன்நெஞ்சொடு கூறிய பாடல் பகுதி இது. தன்னை நோக்கிவந்த
தலைவனிடம் தலைவி, ‘யான் நின்னைக் காணும்இடத்து அஞ்சுவேன்;
ஆதலின் என் கூந்தலைத் தீண்டாதே! நீ என்னை விடுத்து நீ்ங்கு’ என்று
கூறிய கூற்றில், தலைவனைக் கள்வன்பால் சார்த்திக் கூறினமையின், இது
கள்வர் பொருளாக அச்சம் பிறத்தற்கு எடுத்துக்காட்டு.

‘எருத்து .... ... வேந்து’--

     ‘கழுத்தை நிமிர்த்திச் சேரமன்னன் முகத்தை நோக்கின் அவன்
தம்மை நோக்குதலும், அதன்கண் வெகுளியும் புலனாகும் ஆதலின் தம்
வாழ்விற்கு ஊறுநேறும்’ என்ற எண்ணத்தான் கைகூப்பி வழிபட்டே பழகிய
வேற்று வேந்தர், விரையச் செல்லும் குதிரை கட்டப்பட்ட தேரினை உடைய
சேரனுடைய கால்களின் அழகைத் தவிர மேல் பகுதியின் வனப்பைக் கண்டு
அறியாதவர் ஆயினார் - என்ற இப்பாடலில், அரசன் பொருளாக அச்சம்
பிறந்தவாறு.

     நகை அழுகை இளிவரல் மருட்கை என்ற நான்கும் மெய்ப்பாடு உறும்
தன்னையும் பிற பொருளையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றுவன.
அவை போல் அன்றி, அச்சம் தன்னை நிலைக்களனாகக் கொண்டு
தோன்றாது, பிறபொருள்களையே நிலைக்களனாகக் கொண்டு தோன்றும்
என்பது உணரப்படும்.]


    பெருமிதம் என்ற மெய்ப்பாடு
 

      கல்வி - நூல் முதலியன பயிறல். தறுகண் - அஞசத்தக்கன கண்டுழி
அஞ்சாமை. இசைமை--இன்பமும் பொரு
99