786இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

ளும
 

ளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை, கொடை -
உயிரும் உடம்பும் உறுப்பும் முதலிய எல்லாப் பொருளும் கொடுத்தல்.

21 கல்வி:


      ‘வல்லார்முன் சொலல்வல்லேன் என்னைப் பிறர்முன்னர்க்
      கல்லாமை காட்டி யவள்.’

கலி. 141

இதனுள் என்னையும் கல்லாமை காட்டினள் எனத் தன்பெருமிதம்

கூறினமையின் கல்வியும்,

22 தறுகண்:

       அடல்மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்
       மன்றம் படர்வித் தவள்.’

கலி. 141

இதனுள் தறுகண்ணும்,

23 இசைமை:

      ‘கழியாக் காதலர் ஆயினும் சான்றோர்
      பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’

அகநா. 112

இதனுள் புகழும்,

24 கொடை:


      ‘வையம் புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவூக்கும்
      இன்னா இடும்பை செய்தாள்.’

கலி. 141

எனக் கொடையும் பொருளாகப் பெருமிதம் தன்கண் தோன்றிய
பொருள்பற்றியே வந்தவாறு.
 

விளக்கம்
 

     கல்வி என்பதற்குத் தவம் முதலாகிய விச்சை என்றே பேராசிரியர்
பொருள் கூறுவார். சினேந்திரனைத் திருத்தக்கதேவர்,