‘கழியாக்.... ..... வெஃகார்’--
இரவுக்குறி வந்த தலைவனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று வரைவு
கடாய
அகநானூற்றுப் பாடற் பகுதி இது.
‘மிகுந்த அன்புடையராயினும் சான்றோர் பழியோடு வரும் இன்பத்தை
விரும்பார்’ என்று களவு அலர் ஆதல் முதலியன கூறித் தலைவனை
வரையுமாறு தோழி வேண்டும் இப்பகுதியில், சான்றோர் இசைப்பொருட்டாய
பெருமிதத்தோடு இருப்பர் என்பது உணர்த்தப்படுகிறது.
‘வையம் புரவூக்கும் .... .... செய்தாள்’--
இதுவும் முதற்பாடற் பகுதியாம். ’உலகத்தை எல்லாம் பாதுகாத்தலை
முயலும்
உள்ளத்தை உடையேனாகிய என்னை ஒருவர்பால் ஒன்றனை
இரத்தலை
முயலும் வருத்தத்தை உடையேனாகச் செய்தவள்’ என்ற
பகுதியில், வையம் புரவுஊக்குதற்கண் கொடைப்
பொருட்டாய பெருமிதம்
உணர்த்தப்படுகிறது.
பெருமிதம் தன்கண் தோன்றிய பொருள் பற்றியே வரும்.]
வெகுளி என்ற மெய்ப்பாடு:
உறுப்பறை--கையும் கண்ணும் முதலிய உறுப்புக்களை அறுத்தல்.
குடிகோள்-- தாரமும் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கண் கேடு
சூழ்தல். அலை--கோல்கொண்டு அலைத்தல் முதலாயின. கொலை--அறிவும்
புகழும்
முதலாயவற்றைக் கொன்று உரைத்தல்
25 உறுப்பறை:
‘முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று’
கலி. 52
இதனுள் உறுப்பறையும், |