26 குடிகோள்:
நின்மகன், படை அழிந்து மாறினன் என்று பலர்கூற,
‘மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவன் யான்எனச் சினைஇ’
புற. நா. 278
இதனுள் தன்மகன் மறக்குடிக்குக் கேடு சூழ்ந்தான் என்று சினங்
கொண்டாள் ஆகலின் குடிகோளும்,
27 அலை:
‘வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே’
புற. நா. 100
இதனுள், புலியான் அலைக்கப்பட்ட யானை பொருது போந்தும்
அவ்வலைப்புஉண்டலை நினைந்து சினங்கொள்ளா
நின்றது என்றமையின்
அலையும்,
28 கொலை:
‘உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினம்கெழு வேந்தரை.’
புற. நா. 72
இதனுள், சிறுசொல் சொல்லுதல் என்பது புகழ்கொன்று உரைத்தல் ஆதலின்
கொலையும்
பொருளாக வெகுளி பிறிது பொருள்பற்றி வந்தவாறு.
விளக்கம்
‘முறம் .... .... செற்று’
--
தன் காதுப்புறமாகப் பாய்ந்து துன்புறுத்திய புலியை யானை
வெகுளியான்
அழித்தது என்புழி, தன் உறுப்புக்களுக்குத் தீது செய்தல்
பொருளாக
யானைக்குப் புலியிடம் வெகுளி பிறந்தது. |