வெகுளி பிறன்கண் தோன்றிய
பொருள்பற்றியே வரும்.]
உவகை என்ற மெய்ப்பாடு
செல்வம்- நுகர்தற்கு உரியனவற்றின் நுகர்ச்சி. புலன்-கல்விப்
பயனாகிய
அறிவுடைமை. புணர்வு - காமப் புணர்ச்சி முதலாயின.
விளையாட்டு - பதி
இகந்து யாறும் குளனும் காவும் ஆடி வருதல்
முதலாயின.
29 செல்வம்:
‘உரன்உடை உள்ளத்தை செய்பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்.’
கலி. 12
இதனுள் வளமையான் ஆகும்
மனமகிழ்ச்சி இது எனக் கூறினமையின்
செல்வமும்,
(‘நன்கலம் பெற்ற உவகையர்‘ என்பதும் அது.)
30 புலன்:
‘பெண்டிர் நலம் வௌவித் தண்சாரல் தாதுஉண்ணும்
வண்டின் துறப்பான் மலை’
கலி. 40
இதனுள் முகைப்பதம் பார்க்கும் வண்டு போலத் தலைவியரை நகைப்பதம்
பார்க்கும் அறிவுடைமை காமத்திற்கு
ஏதுவாம் ஆகலின் புலனும்,
(‘இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம்’
நாலடி. 137
என்பதும் அது.)
31 புணர்வு:
‘இலவமல ரன்ன அஞ்செந் நாவின்’
என்னும் மணிமிடைபவளத்துள்,-
(142) |