792இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

           ‘தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்
           வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே’


என்று அவள் இவ்வாறு முயங்கினமையால்,

            ‘உவஇனி வாழிய நெஞ்சே’

என்றமையின் புணர்வும்,

32 விளையாட்டு:

        ‘துயிலின்றி யாம்நீந்தத் தொழுவையம் புனலாடி
        மயிலியலார் மருவுண்டு மறந்துஅமைகு வான்மன்னோ.’


கலி 30


இதனுள், ‘ஆறாடி விளையாடி மயிலியலார் மருவுண்டு மறந்து அமைகுவான்


மன்’ என்றமையின் விளையாட்டும் பொருளாக உவகை பிறந்தமை

கண்டுகொள்க.

        இது பிறன்கண் தோன்றிய இன்பம் பொருளாகவும் வரும்.
        பிறவும் அன்ன.
 

விளக்கம்


‘உரன்உடை .... .... என்பாய்’ --

       தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி காட்டது கடுமையும்

தலைவியது மென்மையும் நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண்பக்கமும் தகுதியது அமைதியும் அன்பினது அகலமும் அகற்சியது

அருமையும் கூறிச்செலவு அழுங்குவித்த பாடற் பகுதி இது.

       இதன்கண்,தலைவன் கூறியன தோழியால் கொண்டு கூறப்பட்டன.

‘நீதான் வலியுடைத்தாகிய மனத்தை உடையை. தேடும் பொருளைத்

தேடிமுடித்த செல்வத்தாலே