‘பிணங்கல் சாலா’
தொ.பொ.
256 என்ற மிகையானே
‘சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்நின்
ஆணை கடக்கிற்பார் யார்’
கலி.81
முதலாகிய புலவி பொருளாக
வரும் அச்சத்தையும்,
‘சொல்லப்பட்ட பெருமிதம்’
257
என்ற மிகையானே
,
‘பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைகஎன் தாரே’ புறநா.73
என்ற காமம் பற்றிய
பெருமிதத்தையும்,
‘வெறுப்பின் வந்த வெகுளி’ 258 என்றமிகையானே,
‘செய்தவறு இல்வழி யாங்குச் சினவுவாய்’
கலி 87
என்ற ஊடல்பற்றிய தலைமகள்
வெகுட்சியையும்,
‘அல்லல் நீத்த உவகை’
259
என்ற மிகையானே,
பிறன்கண் தோன்றி இன்பம் பற்றிய உவகையையும் பேராசிரியர்
கொண்டுள்ளாராக, அச்செய்திகள் இவரால் விடுவிக்கப்பட்டன.
அவர்
‘யாப்புற வந்த இளிவரல்’
தொ.பொ.254
‘மதிமை சாலா மருட்கை’
தொ.பொ. 255
என்ற மிகைகளுக்குக் கொண்ட வீரம்பற்றிய இளிவரலும், சிறுமைப் பொருள்
பெருந்தொழில் செய்தலும், பெருமைப் பொருள் சிறுதொழில் செய்தலும்
ஆகிய மருட்கையுமே இவ்வாசிரியரால் கொள்ளப்பட்டன என்பதும் காண்க,]
‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய திறனே நானான்கு என்ப.’
தொல்.பொ. 249
எனவும்,
‘நாலிரண்டு ஆகும் பாலுமா ருண்டே.’
தொல்.பொ. 250
எனவும், |