ஆசிரியர் தொல்காப்பியனார்
மெய்ப்பாட்டியல் தொடங்குதற்கண்ணே
ஓதிய
இவற்றை ஒழித்து ஒழிந்தனவற்றிற்கே இவர் இலக்கணம் கூறியது
என்னை
எனின், நன்று சொன்னாய்; முடியுடை வேந்தரும் குறுநிலமன்னரும்
முதலாயினார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம்
நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும்
கருதிய பொருட்பகுதி பதினாறாகி அடங்கும் எனவும் அம்முப்பத்திரண்டு
மெய்ப்பாடும் பதினாறு ஆதலே அன்றி எட்டாதலும் உண்டு எனவும்,
பிறன்கோள் கூறல் என்னும் உத்திவகையான் கூறியது அல்லது தம் துணிபு
உரைத்தது அன்மையின், ஈண்டு இவர் கூறிற்றிலர் என்க.
சுவைக்கப்படும் பொருளும் அதனை நுகர்ந்த பொறி உணர்வும் அது
மனத்துட்பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பும் அவை பிறந்த உள்ளத்தால்
கண்ணீர் அரும்பலும் மெய்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண்
வரும்
வேறுபாடாகிய சத்துவங்களும் ஆகிய நான்கனையும் சுவை
எட்டோடும்
கூட்டி ஒன்று நான்கு செய்து உறழ முப்பத்திரண்டாம் எனவும்,
சுவைப் பொருளும் பொறியும் வேறு வேறு
நின்ற வழிச் சுவை
பிறவாமையானும்,
அவ்விரண்டும் கூடியவழிச் சுவை பிறத்தலானும்
அச்சுவைப் பொருளும்
பொறிஉணர்வும் ஆகிய ஈரெண்பகுதியும் எட்டாம்
எனப்படும் எனவும்,
குறிப்பும் சத்துவமும் உள்ள நிகழ்ச்சியும் உடம்பின்
வேறுபாடும் ஆகலின்
அவ்வுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுப்பது சத்துவம்
ஆகலின்
அவ்வீரெண்பகுதியும் எட்டெனப்படும் எனவும், இங்ஙனம்
அடக்கிப்
பதினாறாகும் எனவும், சுவை உணர்வும் பொருளும் ஒன்றாக
அடக்கிச்
சுவையும் குறிப்பும் சத்துவமும் என மூன்றாக்கி வெவ்வேறு
இலக்கணம் கூறி,
அவற்றை,
‘எண்ணிய மூன்றும் ஒருங்கு பெறும்என
நுண்ணிதின் உணர்ந்தோர் நுவன்றனர் என்ப.’
செயிற்றியம்
|