798இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

என ந
 

என நாடக நூலின் வழிநூல் செய்த செயிற்றியனார் ஓதுப ஆகலின் அவை
பதினாறும், வீரம் அச்சம் வியப்பு இழிப்பு காமம் அவலம் நகை நடுவுநிலை
என எட்டாய் அடங்கும் எனவும், இவற்றின் விகற்பம் எல்லாம் செயிற்றியம்
முதலிய நூல்களான் ஓர்ந்து உணர்க, ஈண்டு உரைப்பின் பெருகும்
ஆதலான் என்பது.

206


விளக்கம்
 

          ‘பண்ணை .... .... என்ப.’

தொல். பொ. 249

          ‘நாலிரண்டு .... .... உண்டே.’

தொல். பொ. 250


இவை நாடக நூலார் கருத்து ஆதலின், பிறன்கோட் கூறலாக ஆசிரியர்

தொல்காப்பியனார் கூறினமையின் அதனை விடுத்து, இயற்றமிழுக்கு
உரியவற்றையே இவ்வாசிரியர் கொண்டார். சுவைக்கப்படும் பொருள், சுவை

உணர்வு, குறிப்பு, சத்துவம், இவற்றை எட்டுச்சுவையோடும் பொருத்த
முப்பத்திரண்டாம். சுவைக்கப்படும் பொருளையும் சுவை உணர்வையும்
ஒன்றாகவும், குறிப்பையும் சத்துவத்தையும் ஒன்றாகவும் கொண்டு எண்
சுவையோடும் பெருக்கப் பதினாறாம். இவை நான்கும் நிலைக்களனாகப்
பிறக்கும் சுவைகளையே கணக்கிட அவை எட்டாம். சுவைக்கப்படும்
பொருளையும் சுவை உணர்வையும் ஒன்றாகக்கொண்டு, அவற்றோடு
மனத்துட்படும் குறிப்பையும் உடலின்கண்படும் சத்துவத்தையும் இணைத்து
மூன்றாக்கி சுவைதோறும் கொள்வர் செயிற்றியனார்.

      நாடக நூலார் வெகுளியை விடுத்து நடுவுநிலையைக் கொண்டு சுவை
எட்டு என்றனர். வெகுளியின் பயனாக நகையோ அழுகையோ
மருட்கையோ வீரமோ உவகையோ தோன்றும் ஆதலின்,அஃது
அவ்வந்நிலையில் அச்சுவையின் கண் அடங்கும் என்பதே நாடக நூலார்
கருத்து.

     இவையாவும் மெய்ப்பாட்டியல் பேராசிரியர் உரையின்கண்
உள்ளனவாம்.