அகத்திணையியல்--நூற்பா எண் 206799

 

 ஒத்த நூற்பாக்கள்


      ‘உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளின்
      மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும்,’

தொல். பொ. 516


      ‘நகையே அழுகை இளிவரல் மருட்கை
      அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்று
      அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.’

தொல். பொ. 251


      ‘எள்ளல் இளமை பேதைமை மடம் என
      உள்ளப் பட்ட நகைநான்கு என்ப.’

தொல். பொ. 252


      ‘இளிவே இழவே அசைவே வறுமை என
      விளிவுஇல் கொள்கை அழுகை நான்கே.’

தொல். பொ. 253


      ‘மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
      யாப்புற வந்த இளிவரல் நான்கே.’

தொல். பொ. 254


      ‘புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
      மதிமை சாலா மருட்கை நான்கே.’

தொல். பொ. 255


      ‘அணங்கே விலங்கே கள்வர்தம் இறைஎனப்
      பிணங்கல் சாலா அச்சம் நான்கே.’

தொல். பொ. 256


      ‘கல்வி தறுகண் இசைமை கொடைஎனச்
      சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே.’

தொல். பொ. 257


      ‘உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
      வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.’

தொல். பொ. 258


      ‘செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
      அல்லல் நீத்த உவகை நான்கே.’

தொல். பொ. 259
206