சிறப்பில்லா
மெய்ப்பாடுகள்
579 ஆங்கவை ஒருபால் ஆக ஒருபால்
உடைமை1 இன்புறல்2 நடுவுநிலை3அருளல்4
தன்மை5 அடக்கம்6 வரைதல்7 அன்பு8 எனாக்
கைம்மிகல்9 நலிதல்10 சூழ்ச்சி11 வாழ்த்தல்12
நாணுதல்13 துஞ்சல்14 அரற்றுக்15 கனவு16 எனாஅ
முனிதல்17 நினைதல்18 வெரூஉதல்19 மடிமை20
கருதல்21 ஆராய்ச்சி22 விரைவு23 உயிர்ப்பு24 எனாஅக்
கையாறு25 இடுக்கண்26 பொச்சாப்புப்27 பொறாமை28
வியர்த்தல்29 ஐயம்30 மிகை31 நடுக்கு32 எனாஅ
இவையும் உளவே அவையலங் கடையே.
இதுமேல் கூறிவந்த எண்ணான்கும் அன்றி இவை முப்பத்திரண்டும்
அவைபோல மெய்ப்பாடு எனப்படும் என்றவாறு.
(இ-ள்) நகைமுதலாக விளையாட்டு ஈறாகச் சொல்லப்பட்ட
முப்பத்திரண்டும்
ஒருகூறாக, இனிச்சொல்கின்ற ஒரு கூறு உடைமை முதலாக
நடுக்கு
ஈறாகக்கிடந்த அம்முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடு எனப்படும்;
ஈண்டு எண்ணப்பட்டவையே ஆண்டு
அடங்குவனவும் உளஆகலின்
அப்பொருண்மைய அல்லாத இடத்து என்றவாறு.
1 உடைமை:
செல்வம். அது நுகர்ச்சியாயின் உவகைப் பொருளாம், இஃது
அன்னதன்றி, நுகராதே அச்செல்வம் தன்னை
நினைந்து இ்ன்புறுதற்கு
ஏதுவாகிய
பற்றுள்ளம்; அஃதாவது நதிமேல் நின்ற மரம் போலச் செல்வம்
உடைமையான் வரும் மெய்வேறுபாடு.
2 இன்புறல்:
அவ்வுடைமையை நினையுந்தோறும் இடையிட்டுப் பிறக்கும்
மனமகிழ்ச்சி.
|