அகத்திணையியல்--நூற்பா எண் 207801

 

3  நடுவுநிலை:


   ஒன்பது சுவைகளுள் ஒன்றென நாடகநிலையுள் வேண்டப்படும் சமநிலை;
   அஃதாவது ‘ செஞ்சாந்து எறியினும் செத்தினும் போழினும்-நெஞ்சுஓர்ந்து
   ஓடா நிலைமை' (பழமொழி. 95) அது காமம் வெகுளி மயக்கம்  

   நீங்கினோர் கண்ணே நிகழ்வது. இது சிறுவரவிற்று ஆகலான்

   இவற்றோடு கூறினார்.

4  அருளல்:


   மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளுதல். அது ‘அரிதாய அறன்எய்தி
   அருளியோர்க்கு அளித்தலும்’ கலி. 11. என்றாற்போல வருவது.   

   ஆண்டை, (206) கருணையினை அழுகை என்றமையின், இஃது 

   அதனோடு அடங்காது.

5  தன்மை:


   சாதித்தன்மை; அவையாவன--பார்ப்பாராயின் குந்திமிதித்துக் குறுநடை
   கொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தோடும் அடுத்த
   மார்போடும் நடந்து சேறலும், இடையராயின் கோல்கையும் கொடுமடி
   உடையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றுதலும் என்று
   இன்னோரன்ன வழக்கு நோக்கிக் கொள்க.

6  அடக்கம்:


   உயர்ந்தோர் முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை பணிந்த   

   மொழியும் தணிந்த நடையும் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் 

   முதலாயின.
101