802இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

3 ந
 

7  வரைதல்:
  

        காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம். அவை 
   பார்ப்பாராயின் முத்தீ வேட்டலும், புலவும் கள்ளும் முதலாயின 
   கடிதலும் என்று இன்னோரன்ன கொள்க. வரைதல் தொழிலாகலான், இது 

   தன்மை எனப்படாது.

8  அன்பு :
  

   அருட்கு முதலாகி மனத்து நிகழும் நேயம். அஃது உடையார்க்குப்

   பிறன்கண் துன்பம் கண்ட வழிக் கண்ணீர் விழும் ஆதலின், 

   அவ்வருளானே அன்புடைமை விளங்கும் என்பது.

   இவை எல்லாம் தத்தம் மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுப்பன

      ஆதலின் மெய்ப்பாடு எனப்பட்டன. இனி வருகின்றவற்றிற்கும் இஃது

   ஒக்கும்.

9  கைம்மிகல்:
  

   ஒழுக்கக்கேடு. அது சாதித்தருமத்தினை நீங்கினமை தன் உள்ள
   நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல்.

10  நலிதல்:
  

   பிறருக்கு இன்னா செய்து நெருங்குதல். அது தீவினைமாக்கள்கண் 
   நிகழும். அவரைக் கண்டு அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சத்தினுள்

   அடங்கும் ஆதலின், அஃதன்று இது என்பது.

11  சூழ்ச்சி :
  

   சுழற்சி; சூழ்வருவானைச் சுழல்வரும் என்ப ஆகலின். அது
   வெளிப்படுவதொரு குறிப்பு அவன்கண் தோன்றின் அதுவும் மெய்ப்பாடு;
   அஃதாவது மனத் தடுமாற்றம்.