அகத்திணையியல்--நூற்பா எண் 206803

7 வ
 

 12  வாழ்த்தல்:
   

    பிறரால் வாழ்த்தப்படுதல். வாழ்த்தல் பிறன்வினை அன்றோ எனின்,
    ஒருவனை ‘ நீடு வாழ்க ‘ என்று வாழ்த்தல் பிறன்வினை ஆயினும்,
    அதனால் வாழ்விக்கப்படுதலின் அவ்வாறு கூறல் அமையும் என்பது.

13  நாணுதல்:
  

    நாண் உள்ளம் பிறருக்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி.

14  துஞ்சல்:

   

    உறக்கம். அது நடந்து வருகின்றான்கண்ணும் விளங்கித் தோன்றலின்
    அதுவும் மெய்ப்பாடு எனப்பட்டது.

15  அரற்றல்:
  

    அழுகை அன்றிப்பலவும் சொல்லித் தன்குறை கூறுதல். அது காடு
    கெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல் போல, வழக்கினுள்ளார் 
    கூறுவன.

16  கனவு:
  

   வாய் வெருவுதல்; அதனானும் அவன் உள்ளத்து நிகழ்கின்றது ஒன்று  

   உண்டு என்பது அறியப்படும்.

17  முனிதல்:
   

    வெறுத்தல்; அஃது அருளும் சினமும் இன்றி இடை நிகர்த்தாதல். 

    ‘வாழ்க்கை முனிந்தான்’ எனவும்,


        ‘உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே.’

புறநா. 96

    எனவும் சொல்லுப ஆகலின்.

18  நினைதல்:
  

   விருப்புற்று நினைதல்; நின்னை மிகவும் நினைத்தேன் என்பது   
   வழக்காதலின். அந்நினைவுள்ளம் பிறருக்குப் புலனாதலின்
   மெய்ப்பாடாயிற்று.