804இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

19 வெரூஉதல
 

19  வெரூஉதல்:


    விலங்கும் புள்ளும்போல வெருவிநிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது 

    அஞ்ச வேண்டாதன கண்ட வழியும் கடிதின் பிறந்து மாறுவது

    ஒருவெறி.

20  மடிமை: --சோம்பு.

21  கருதல்: --மறந்ததனை நினைத்தல்.

22  ஆராய்ச்சி:


    ஒரு பொருளை நன்று தீது என்று ஆராய்தல்.

23  விரைவு:


    இயற்கைவகையான் அன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட

    உள்ளம் நிகழும் கருத்து.

24  உயிர்ப்பு:


    வேண்டிய பொருளைப் பெறாதவழிக் கையறவு எய்திய கருத்து. அது
    நெட்டுயிர்ப்புக்கு முதலாகலின், அதனையும் உயிர்ப்பு என்றார் என்பது.

25  கையாறு:


    அவ்வுயிர்ப்பும் இன்றி வினை ஒழிந்து அயர்தல்.

26  இடுக்கண்:


    மலர்ந்த நோக்கம் இன்றி, மையல் நோக்கம் படவரும் இரக்கம்.

27  பொச்சாப்பு:


    அற்றப்படுதல்; அஃதாவது பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண்  
    யாதானும் ஓர் இகழ்ச்சியான் இடையறவுபடுதல்.

28  பொறாமை:


    அழுக்காறு; அஃதாவது பிறர் செல்வம் கண்டவழி வேண்டாதிருத்தல்.