29 வியர்த்தல்:
பொறாமை முதலாயின பற்றி மனம் புழுங்குதல்.
30 ஐயம்:
ஒரு பொருள் மேல் இருபொருள்தன்மை கருதி வரும் மனத்தடுமாற்றம்.
31 மிகை:
கல்லாமையும் செல்வமும் இளமையும் முதலாக வரும் உள்ள மிகுதி.
32 நடுக்கம்:
அன்பும் அச்சமும் முதலாயின உடம்பில் புலப்படுமாற்றான் உள்ளம்
நடுங்குதல். புதல்வற்குப் பிணி இல்வழியும் எவனாங்கொல் என்று
நடுங்குதல்
அன்பால் நடுங்குதலாம்; அச்சம் என்னும் சுவை பிறந்ததன்
பின்னர்
அதன்வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தால் தோன்றிய
நடுக்கமாம் என்று
உணர்க.
மற்று, இவற்றை எண்ணிய மாத்திரை அல்லது இலக்கணம் கூறிற்றிலர்,
சொல்லின் முடியும் இலக்கணத்த ஆகலின், உதாரணம் இக்
கூறியவாற்றான்
வழக்கு நோக்கியும் செய்யுள் நோக்கியும் கண்டு
கொள்க.
207
விளக்கம்
இந்நூற்பா தொல்காப்பியப் பொருட்படல 260 ஆம் நூற்பா, உரை
பேராசிரியர் உரைத்த உரையே.
நதிக்கரையில் நின்ற மரம் தன்னை ஒட்டி நீர் நிரம்ப இருப்பினும்
தான்
நுகரும் அளவே நுகர்தல் அன்றி மிகுதியாக நுகர்தல் இயலாதது
ஆயினும்
நதிக்கரையில் நிற்கும் சிறப்புடையது; அதுபோலத் தன்னிடத்து
உள்ள
மிகுந்த |