806இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

செல
 

செல்வத்தால் தான் நுகரலாம் அளவே நுகர்ந்து, மிகுதியான செல்வம்
இருக்கிறது என்ற உள்ள நிலையே ‘நதிமேல் நின்ற மரம் போல' என்பதன்
விளக்கமாம்.

    ‘செஞ்சாந்து .... .... நிலை’ --

 

     சந்தனம் பூசியதனால் மகிழ்ச்சியும் வெட்டிச் செதுக்கியதனால்
துன்பமும் கொள்ளாது எப்பொழுதும் ஒரே பெற்றியராய் இருக்கும் நிலை.

    அருளியோர் -- நம்மால் அருள்செய்யத் தக்கார்.

    தன்மை- குந்தி மிதித்து - நெடுந்தொலைவு செல்லுங்கால்
இடையிடைத் தங்கி மெல்லநடந்து; அழுந்த மிதியாது மெல்ல மிதித்து
என்பதும் ஆம்.

    கோற்கை- நிரைகளை ஒட்டுதற்குரிய கோலை வைத்திருக்கும் கை.

    கொடுமடி- இலை முதலியன இடுதற்கு விடும் வளைந்த மடி.

    வீளை- நிரைகளை அழைப்பதற்கு ஒலிக்கும் சீழ்க்கை.


    வெண்பல்- தம்பலம் சுவைக்காத பற்கள்.

    தானை மடக்கல--ஆடையை அலைய விடாது மடக்கிக் கொள்ளுதல்.

    காடுகெழு செல்விக்குப் பேய் கூறுவன பரணிநூல்களில்
‘பேய் முறைப்பாடு' என்ற பகுதியான் அறியலாம்.

    ‘உறையுள் .... .... ஊரே' --

    அதியமான் படையெடுத்துச் செல்லும் ஊர்களில் தங்கி இருத்தலை
ஊர்மக்கள் வெறுப்பர்.

     உயிர்ப்பு -- செயலற்று மூச்சுவிடுதல்.


     மலர்ந்த நோக்கம -- தெளிந்த பார்வை.