எனவரும். இது மடமையால் தோன்றிய
நகை ஆகலின் இது மறைத்தலும்
தலைமகற்கு உரித்தன்று. எனவே, அவற்காயின் நகை தோன்றப்பெறும்
என்பதாம்.
4 சிதைவு பிறர்க்கு இன்மை :
அங்ஙனம் நகுநயம் மறைத்தவழியும் உள்ளம் சிதைந்து நிறை அழியும்
ஆகலின், அச்சிதைவு புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை
நிறுத்துதல்.
அது,
‘அகம்மலி உவகையள் ஆகி முகன்இகுத்து
ஒய்யென இறைஞ்சி யோளே.’
அகநா.86
எனத் தலைமகன் அறிய மெய்ப்பட்டது
என்பது. இதுவும் தலைமகற்கு
உரித்தன்று, தன் சிதைவு உணர்த்தின் அல்லது மறைக்குந்துணை சிதைவு
இன்மையின்; என்னை ?
‘பெருமையும் உரனும் ஆடூஉமேன.’
தொல். பொ.98
என்ப ஆகலின்.
இனி, இவை நான்கும் முறையானே ஒருங்கு வந்த செய்யுள் வருமாறு:
‘யான்தற் காண்டொறும் தான்பெரிது மகிழாள்
வாணுதல் வியர்ப்ப நாணினள் இறைஞ்சி
மிகைவெளிப் படாது நகைமுகம் கரந்த
நன்னுதல் அரிவை தன்மனம் சிதைந்ததை
நீ அறிந் திலையால் நெஞ்சே
யான்அறிந் தேன் அது வாயா குதலே.’
எனவரும்.
இவை நான்கும் முதல் அவத்தைக்கண் நிகழ்வன.
விளக்கம்
புகுமுகம் புரிதல் -- தலைவன் பார்வைக்குஎதிர் தலைவி சென்று நிற்றல்.
நோக்கினை முகம் என்பது, |