இஃது இயற்கைப்
புணர்ச்சியால் தலைவியைக் கூடி நீங்கிய
தலைமகன்
தன்
நெஞ்சிற்குச் சொற்றது.
‘தான் பெரிது மகிழாள்’ எனவே, சிறிது மகிழும் என்பது புகுமுகம்
புரிதல்.
‘வாள்நுதல் வியர்ப்ப’ என்பது பொறிநுதல் வியர்த்தல். ‘நகை முகம்
கரந்த’
என்பது நகுநயம் மறைத்தல். ‘அரிவை தன் மனம் சிதைந்தது’
என்பது
சிதைவு பிறர்க்கு இன்மை--எனக் கொள்க.
ஒத்த நூற்பா
‘புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைவு பிறர்க்கு இன்மை
தகுமுறை நான்கே ஒன்றுஎன மொழிப.’
தொல். பொ. 261]
5 கூழை விரித்தல்:
தன் உள்ளத்து நிகழ்ந்த வேறுபாட்டினை, அக்காலத்துத் தலைமகள்
நிறை
உடையவள் ஆதலால் கரந்து ஒழுகற்பாலளே; அங்ஙனம்
கரக்குங்கால், தன்
வயத்தது ஆகிய உடம்பு பற்றி வரும்
வேறுபாட்டினைத் தாங்கும்; அங்ஙனம்
தாங்குங்கால், உடம்பொடு
தொடர்பு உடையதாகி வேறுபட்ட
தலைமயிரினதுமுடி உள்ள
நெகிழ்ச்சியானே தன் வயத்தது அன்றி நெகிழ்தல்.
அக் கூழைவிரிதற்கு
ஏதுவாயினாள் இவள் ஆகலின், அதனைச் சினை
வினையான் அன்றி
முதல் வினையால் கூறினார் என்பது.
6 காது ஒன்று களைதல்:
உறுப்பிடைப் பூட்டுறப் புனையாது பெய்து வைத்தன ஆதலான், தோடு
முதலாயின எளிதின் வீழ்வன ஆயின. மற்று, அவை வீழ்தற்கு
ஏதுவாகிய
நெகிழ்ச்சி நிரம்பத் தோன்றாது இடை நிகர்த்தது ஆதலின்,
ஒன்று நிற்ப
ஒன்று வீழ்தல் எனப்பட்டது. இது கூழை |