போலாது ஊறுஉணர்வு உடைய
உறுப்பு ஆகலின், காதின்
வேறுபாட்டினைக்
கூழை வேறுபாட்டின் பின் வைத்தார்; என்னை ?
கூழையின் காது தனக்கு
உறவு உடைமையின்.
7 ஊழ்அணிதைவரல் :
அக் கூழையும் தோடும் போலாது பெய்யப்படும் முறைமைய ஆகிய
வளைகளை முன்கைமேல் இறுகச் செறித்தலும். விரல் செறியினைத்
திருத்தலும் முதலாயின. இவைதோடு போலச் செறிவு இல்லன
அன்மையின்,
அவற்றுப் பின் வைத்தார்.
8 உடைபெயர்த்து உடுத்தல்:
உடுத்த உடையினைப் பலகாலும் அழித்து உடுத்தல். அது கழல்தொடி
போலாது செறிவு உடைமையின் அவ்வுடை நெகிழ்ச்சியைத் தொடி
நெகிழ்ச்சிக்குப் பின் வைத்தார். மற்று,
‘தொடி நெகிழ்ந் தனவே தோள்சா யினவே’
குறுந். 239
எனப் பிரிவின்கண் வந்த
வேறுபாட்டினை ஈண்டுக்கூறார்; அவை,
‘வினைஉயிர் மெலிவிடத்து இன்மையும் உரித்தே’
தொல். பொ. 268
என்ப ஆகலின், உயிர் மெலிவிடத்து
இடையறவுபட நிகழ்ந்தன
ஆகலான்
என்பது.
இவற்றிற்குச் செய்யுள்:
‘விண்உயர் விறல்வரைக் கவாஅன் ஒருவன்
கண்ணின் நோக்கியது அல்லது தண்ணென |