‘விண்உயர் .... ....
கூறுமாறு எமக்கே‘--
‘வானளாவிய சிறந்த மலையில் கள்வன் ஒருவன், என்னைக்
கண்ணால்
நோக்கினானேயன்றி, மனங்குளிர ஒரு சொல்லும்
உரைக்கவில்லை. அவன்
இம்மலையகத்து விரும்பி வீற்றிருக்கும் கடவுளும்
அல்லன். அதற்கே என்
மயிர்முடி முதலில் நெகிழ, காதுகளில்
அணிந்துள்ள தோடுகளில் ஒன்று
நெகிழ, பின் ஒளி பொருந்திய
அணிகலன்களும் மனத்தோடு கழல,
ஆடையும் பன்முறை நெகிழத்
தொடங்கிவிட்டது. அதன் காரணம் உனக்கே தெரியும். ஆதலின்,
அஃது
யாது என்பதை எனக்கே கூறுவாயாக’ என்ற இப்பாடல், தோழிக்குத்
தலைமகள் அறத்தொடுநின்றது.
இதன்கண் ‘ஓதி முந்துற நெகிழ’ என்பது
கூழை விரித்தல். ‘காது ஒன்று நெகிழ’ என்பது காது
ஒன்று களைதல்.
‘நிழல் அவிர்மணிப்பூண் நெஞ்சொடு கழல’ என்பது ஊழ் அணி தைவரல்.
‘துகிலும் பன்முறை நெடிது நிமிர்ந்தன’ என்பது உடை பெயர்த்து உடுத்தல்.
ஒத்த நூற்பா
‘கூழை விரித்தல் காதுஒன்று
களைதல்
ஊழ்அணி தைவரல் உடைபெயர்த்து உடுத்தலோடு
ஊழி நான்கே இரண்டுஎன மொழிப.’
தொல். பொ. 210]
9 அல்குல் தைவரல்:
மேல் உடைபெயர்த்து உடுத்தவள் அது பெரிதும் நெகிழ்ந்து
காட்டியதனைப்
பாதுகாத்தல்.
10 அணிந்தவை திருத்தல்:
அங்ஙனம் பாதுகாத்தவள் உடை நெகிழ்ச்சியைப் போற்றிக் கடிசூத்திரம்
முதலாயின திருத்தல். |