அகத்திணையியல்--நூற்பா எண் 208819

11 இல
 

 

11  இல்வலி உறுத்தல்:


   அங்ஙனம் திருத்தினவள் புணர்ச்சியை வேண்டாதாள் போல வன்மை
   படைத்துக்கொண்டு செய்தல்; இல்வலி உறுத்தல் என்பதற்கு  

   இற்பிறத்தலான தன்வலி தோன்ற நிற்றல் எனவும் சொல்லுப.

12  இருகையும் எடுத்தல்:


   அங்ஙனம் படைத்துக்கொண்ட வலியானும் தடுக்கப்படாது, நிறை 

   அழிதலின் கைகள் தாமே முயங்கல் விருப்பத்தான் எழுவன 

   போல்வதொரு குறிப்பு.

   இவை நான்கும் மூன்றாம் அவத்தைக்கண் நிகழ்வன.

எடுத்துக்காட்டு:

     ‘ஓதியும் நுதலும் நீவி யான்தன்
     மாதர் மென்முலை வருடலின் கலங்கி
     உள்ளத்து உகுநள் போல அல்குலின்
     நெகிழ்நூல் கலிங்கமொடு புகும்இடன் அறியாது
     மெலிந்திலள் ஆகி வலிந்துபொய்த்து ஒடுங்கவும்
     யாம்எடுத்து அணைத்தொறும் தாம்இயைந்து எழுதலின்
     இம்மை உலகத்து அன்றியும் நம்மை
     நீள்அரி நெடுங்கண் பேதையொடு
     கேள்அறிந் தனகொல்இவள் வேய்மென் தோளே.’


எனவரும்.
 

விளக்கம்
 

     அல்குல் தைவரல் - உடை நெகிழ்ச்சியைப் போற்ற வயிற்றின்
அடிப்பகுதியில் அதனைப் பிடித்துக்கொள்ளுதல்.


     கடிசூத்திரம் - ஆடைமேல் அதன் நெகிழ்ச்சி போற்றி அணியும்
அணிகலம்.