‘இம்மை உலகத்து அன்றியும்
கேள் அறிந்தன’ என்பது இருவர்
அன்பும்
எழுமையும் தொடர்ந்த அன்பு என்று கூறியவாறு.
ஓத்த நூற்பா
‘அல்குல் தைவரல் அணிந்தவை
திருத்தல்
இல்வலி உறுத்தல் இருகையும் எடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்றுஎன மொழிப.’
தொல். பொ. 263]
13 பாராட்டு எடுத்தல்:
அங்ஙனம் பன்னிருவகை மெய்ப்பாடும் நிகழ்ந்தவழிப்புணர்ச்சி நிகழும்
அன்றே. அதன்பின்னர்த் தலைமகனை இயற்பட நினையும் குறிப்பு.
பாராட்டு
என்னாது ‘எடுத்தல்’ என்றதனால், இதனை உள்ளம் எடுத்தல்
மேற்கொள்க.
14 மடம்தப உரைத்தல்:
விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமடம் நீங்கிக்
காமப்பொருட்கண்ணே
சிறிது அறிவு தோன்றப் பாங்கிக்குச் சில
கூற்றுமொழி கூறல்; மடந்தப
உரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு
மெய்ப்பாடு எனப்படும்.
15 ஈரம் இல்கூற்றம் ஏற்று அலர் நாணல்:
அங்ஙனம் அறிமடம் கெடச் சொல் பிறந்தவழி இன்றளவும் தமரால்
கூறப்படாத கடுஞ்சொல் உளவாம் அன்றே ! அவற்றை முனியாது
ஏற்றுக்கொண்டு,‘புறத்தார்க்கு இது புலனாங்கொல்?’ என்று நாணுதல்.
16 கொடுப்பவை கோடல்:
தலைமகனால் கொடுக்கப்பட்ட தழையும் கோதையும் தாரும் கண்ணியும்
தோள்மாலையும் முதலாயின கொண்டு கையுறை பாராட்டுதல்.
இவை நான்காம் அவத்தைக்கண் நிகழ்வன. |