822இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

இவற
 

இவற்றிற்குச் செய்யுள்:

     ‘ஒருநாள் வந்து பலநாள் வருத்தும்
      நின்னே போலும் நின்தழை என்வயின்
      நிற்பா ராட்டியும் சொற்கொளல் இன்றியும்
      யாய்எதிர் கழறலின் பேர்அலர் நாணியும்
      மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந்து ஆயினும்
      நோய்செய் தன்றால் தானே
      நீதொடக் கரிதலின் ஓரிடத் தானே.’


எனவரும்.
 

விளக்கம்


     இவை புணர்ச்சிக்குப்பின் நிகழும் மெய்ப்பாடுகளாம்.

     தலைவன் பெருமையைத் தலைவி தன் மனத்துக் கொள்வாளேயன்றித் தோழி முதலிய யாரிடத்தும் கூறாள். தலைவனாயின், தன் பாங்கனிடம் கூறவும் படும் என்பது.

    மடம்தப உரைத்தல்-பிறை தொழ மறுத்தல் போல்வன-

‘ஒருநாள் வந்து‘

இது தோழி கையுறை மறுத்தது.

    ‘ஒரு நாள் வருதலினாலேயே நீ வாராத பலநாளும் எங்களைத்
துன்புறுத்தும் உன்னைப் போலவே உன் தழையைக் கருதுதலால் என்னிடம்
உன்னை இயற்பட மொழிந்தும், என் சொற்களைப் பண்டு போலக்
கொள்ளாமலும், தாயின் வெகுளிச் சொற்களைப் பொறுத்து அலருக்கு
நாணியும் மயக்கம் மிகும் தலைவிக்கு உன் தழை துயர் தீர்க்கும் மருந்து
ஆயினும், நீ தொட்ட இடத்தில் உன் காமத்தீயால் அது கரிந்து
காட்டுதலின் நோய் தருகின்றது’-- இது முன்னொருகால் கையுறை ஏற்ற
தோழி பின் ஒருகால் காரணம் காட்டி மறுத்தது.