‘நிற்பாராட்டி’- பாராட்டெடுத்தல்
‘சொற்கொளல் இன்றி’ - மடந்தப
உரைத்தல் ‘பேர் அலர் நாணி, - அலர் நாணல். ‘தழைதுயர் மருந்து, -
கொடுப்பவை கோடல்.
ஒத்த நூற்பா
‘பாராட் டெடுத்தல் மடந்தப
உரைத்தல்
ஈரமில் கூற்றம் ஏற்றுஅலர் நாணல்
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ
எடுத்த நான்கே நான்குஎன மொழிப.’
தொல்.பொ. 264]
17 தெரிந்துடம்படுதல் :
அங்ஙனம் கொடுப்பவை கோடல் நிகழ்ந்தவழி அவ்வொழுகலாறு
புறத்தார்க்கு எல்லாம் ஐயமாகலின் அதன்வழித் தலைமகனைத்
தலைமகள்
கூடி ஒழுகும் இவ்வொழுகலாறு நிகழ்ந்தவாற்றைப் பட்டாங்கு
உணராதார்,
‘தலைமை செய்தனள் இவள்’ எனவும், ‘தகாத
ஒழுக்கத்தினள் இவள்’
எனவும் பல்லாற்றானும் இவள்-கண்ணே
ஏதமிட்டுத் துணிந்தும் துணியாதும்
உரைப்பார் ஆகலான், அதற்கு
நாணி, ‘இனி யாது கொல்லோ செயற்பாலது?’ என்று ஆராய்ந்து
‘இ்வ்வொழுக லாற்றினை அறிவிப்பேங்கொல்?
அறிவியேங் கொல்?’
எனத்தடுமாறிப் பின் ஒருவகையான், முழுவதூஉம்
சொல்லாது,
தன்குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண் தன்மைக்கும்
ஏற்றவகையான்
வேண்டுவன தெரிந்து கொண்டு, இன்னவாறுபட்டது என்று
தோழிக்கு
உடன்படுதலும், தோழியால் செவிலிக்கு உடன்படுதலும் என
இன்னோரன்ன குறிப்பினைத் தெரிந்து உடன்படுதல்.
18 திளைப்பு வினைமறுத்தல்:
அங்ஙனம் தமர்க்குத் தான் உடன்பட்டதன் பின்னர்த் தலைமகனோடு
பகலும்
இரவும் பண்டு திளைத்தவாறு திளைத்தலை அச்சமும் நாணும்
காரணமாக
மறுத்தல். |