19 கரந்திடத்து ஒழிதல்:
அக்காலத்து இற்செறிக்கப்படுதலான் தான் அவனை மறுத்த ஏதத்திற்கு
நாணியும், அஞ்சியும் அவற்கு வெளிப்படாது ஒழுகுதல். தன் இடத்தே
தங்குதலை ‘இடத்து ஒழிதல்’என்றார்.
20 கண்டவழி உவத்தல் :
அங்ஙனம் கரந்து ஒழுகும் காலத்து அவனை ஒரு ஞான்று கண்டவழிக்
கழிஉவகை மீதூர்தல்.
இவை நான்கும் ஐந்தாம் அவத்தைக்கண் நிகழ்வன.
இவற்றிற்குச் செய்யுள்:
‘அறியாய் கொல்லோ நீயேதெறுவர
நோக்குதொறும் பனிக்கும் நெஞ்சமொடு இவளே
யாய்க்குஅறி வுறாஅலின் நின்எதிர் நாணி
மனைவயின் பிரியலள் மன்னே அதற்கே
நினைவிலள் இவள்என உரைத்தி
புனைதார் மார்ப காண்டியோ அதுவே.’
எனவரும்.
விளக்கம்
பட்டாங்கு - நிகழ்ந்தவாறு.
‘அறியாய் கொல்லோ’
பகற்குறிக்கண் தலைமகளை இடத்து உய்த்துவந்து, தலைமகனை
எதிர்ப்பட்டு நின்று தோழி
வரைவுகடாய பாடல் இது.
‘தலைவனே! நீ அறியாயோ! அஞ்சுதல் தோன்றத்தாய்
பார்க்குந்தொறும் நடுங்கும் மனத்தோடு,
தலைவி தாய்க்கு அறத்தொடு
நின்றமையின், நின் எதிர் வருதற்கு
|