அகத்திணையியல்--நூற்பா எண் 208825

 

 

நாணங்கொண்டு, வீட்டைவிட்டு நீங்காது இற்செறிக்கப்பட்ட நிலையில்
உள்ளாள்.  அதனை நோக்காது நீ ‘தலைவி உன்னை விருப்புற்று
நினைக்கவில்லை’ என்கின்றாய். உன்னைக் காணுங்கால் அவள்
உள்ளமகிழ்ச்சியை நோக்கிக்காண்.’ என்றவாறு,

     ‘யாய்க்கு அறிவுறாலின்’ என்பது தெரிந்து உடம்படுதல்; என்னை? அவள் நோக்குதொறும் பனித்தலின், அறிவுறுத்தாள் என்றமையின். ‘நின்
எதிர்நாணி’ என்பது திளைப்பு வினைமறுத்தல்; என்னை? ‘தமர்க்கு
இம்மறையினை உரைத்தாள்’ என்று நீ பேசுவாயே என்று நாணம் உற்றாள்
என்றமையின். ‘மனைவயின் பிரியலள்’ என்பது கரந்திடத்து ஒழிதல்.
‘புனைதார் மார்ப! காண்டியோ அதுவே’ என்பது கண்டவழி உவத்தல்;
என்னை? ‘நிற்கண்டவிடத்து நுதலும் தோளும் பசலை நீங்கியவாறு
கண்டிலையோ?’ என்னும் குறிப்பினால் கூறினமையின்.
 

ஒத்த நூற்பாக்கள்


     ‘தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்
      கரந்திடத்து ஒழிதல் கண்டவழி உவத்தலொடு
      பொருந்திய நான்கே ஐந்துஎன மொழிப’

தொல். பொ. 215]


21  புறம் செயச் சிதைத்தல்:


   பூவும் சாந்தும் பூணும் துகிலும் முதலாயின கொண்டு புறத்தே கோலம்
   செய்ய, அகத்தே சிதைவு உண்டாதல். மேல்நின்றது கண்டவழி உவத்தல்
   ஆகலானும், இது காணாதவழி நிகழ்கின்றது ஆகலானும் அதற்கு இனம்
   இன்றியும் அதன்வழித் தோன்றியது எனப்படும் ஆகலின் இஃது
   அதன்வழித்து ஆயிற்று என்பது.
104