22 புலம்பித் தோன்றல்:
அங்ஙனம் புனைந்த கோலம் துணையொடு கழியப் பெறாமையின்
புல்லென்று
அழிந்த நெஞ்சினள் ஆகலான், எல்லாச் சுற்றத்தார்க்கும்
இடைநின்றேயும்,
தனியள் என்று அறிவியாநிற்றல்.
23 கலங்கி மொழிதல்:
கையொடுபட்ட கள்வரைப் போலச் சொல்லுவனவற்றைத் தடுமாற்றம்
தோன்றச் சொல்லுதல். அஃதாவது தன் மனத்து நிகழாநின்றன தன்னை
அறியாமல் சில புலப்படச் சொல்லுதல் ஆயிற்று.
24 கையறவு உரைத்தல்:
கலங்காது சொல்லுங்கால் செயலறவு தோன்றச் சொல்லுதல்; அஃதாவது
வன்புறை எதிரழிந்து சொல்லுவன போல்வன.
இவை நான்கும் ஆறாம் அவத்தைக்கண் நிகழ்வன.
புறஞ்செயச் சிதைதல் முதலிய நான்கற்குச் செய்யுள்:
‘இவளே, அணியினும் பூசினும்பிணிஉழந்து அசைஇப்
பல்கிளை நாப்பண் இல்கிளை போல
மொழிவகை அறியாள் பொழிகண் நீர்துடைத்து
யானே கையற அலமரும்
கூறாய் பெரும நிற்றேறு மாறே.’
எனவரும்.
விளக்கம்
தனியள் என்று அறிவியாநிற்றல்
- தான் தலைவன் தொடர்பு அன்றித்
தோழி முதலிய பிறர் தொடர்பை வெறுத்தமையின், தனித்திருப்பாளாக
நெஞ்சத்துக் கருதுதல்.
|