‘இவளே அணியினும்’
இது தோழி தலைமகனை நெருங்கி வரைவு கடாயது.
பெரும! தலைவிக்கு அணிகலன்களை அணிவித்தாலும் சாந்து முதலிய
பூசினாலும் அவ்வனப்பைக் காண்டற்கு நீ இல்லையே என்று மனம்
மெலிந்து, சுற்றத்தார் பலரிடைத்தான் இருப்பினும் ஒருவரும் இல்லாத
தனியளைப் போலத் தன்னைக் கருதிக்கொண்டு, தடுமாற்றம் இல்லாது
உரையாடும் நிலையை அறியாளாய், தான்உகுக்கும் கண்ணீரைத் தன்னோடு
ஒன்றுபட்ட யானே துடைத்துச் செயலறவுபட அவள் மனம் சுழலுகிறாள்.
உன்னைத் தெளியும் வழிதான் யாதோ?’ என்றவாறு.
‘அணியினும் பூசினும் பிணிஉழந்து அசைஇ’--புறம் செயச் சிதைத்தல்.
‘பல்கிளை நாப்பண் இல்கிளை போல’-- புலம்பித்தோன்றல். ‘மொழி வகை
அறியாள்’ -- கலங்கி மொழிதல். ‘யானே கையற அலம் வரும்’-- கையறவு
உரைத்தல்; என்னை? தன் கண்ணீர் துடைத்தலும் ஆற்றாள் என்றமையின்.
ஒத்த நூற்பா
‘புறம்செயச் சிதைதல்
புலம்பித் தோன்றல்
கலங்கி மொழிதல் கையறவு உரைத்தலொடு
புலம்பிய நான்கே ஆறுஎன மொழிப.’
தொல். பொ. 266
இனி, பேராசிரியர் “புகுமுகம்
புரிதல் முதலிய நான்கும் தலைமகளனவே
ஆகி ஓர் இனத்தவாயின. தலைவியைத் தலைமகன் பொருந்தியவழிக் கூழை
விரித்தல் முதலிய நான்கும் நிகழ்ந்தமையின், அவை மேலனற்றோடு சிறிது
இடையறவுபட்டு நிகழ்ந்தன. அல்குல் தைவரல் முதலிய நான்கும்
புணர்ச்சிக்கு மிகவும் இயைபு உடைமையின் மேலனவற்றோடு ஒன்றாது
வேறாயின. பாராட்டெடுத்தல் முதலிய நான்கும்
|